ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில், 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடந்த பெண்களுக்கான அரையிறுதி சுற்றில் (51 கிலோ ) எடைப் பிரிவில், 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம், மங்கோலியா வீராங்கனையான லுத்சாய்கான் அல்டான்ட்செட்செக்குடன் மோதினார். இதில் மேரிகோம் 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். […]
