உரக்கச் சொல்லும் படமாக மேதகு திரைப்படம் இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் […]
