மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் […]
