கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வருவாய் இன்றி தவிப்பதால் திருமண மண்டபங்கள், அரங்குகள் ஆகியவற்றை 50 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும் என மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி தினகரன், கடந்த ஆறு […]
