இந்தியாவின் வளர்ச்சியை விரும்புவோர் “மேக் இந்தியா நம்பா் 1” இயக்கத்தில் சேருவதற்கு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று காணொலி மூலம் தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, “நான் இன்று ஒரு எண்ணை வெளியிடுகிறேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, உலகத்தில் முதலிடத்தில் சக்தி வாய்ந்த நாடாக மாற்ற விரும்புபவர்கள் இந்த இயக்கப் பணியில் சேர வேண்டும். […]
