கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அமைந்துள்ள மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட நிதி ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால் தமிழக அரசு கர்நாடகாவின் இந்த செயலுக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் ஒன்று மேகதாது அணை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் உரையாற்றியபோது, “மேகதாது அணை தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றை நமது நீர்வளத்துறை அமைச்சர் கொண்டுவந்து அதனை அரசியல் […]
