மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனையை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக மீனாட்சி அம்மனே தண்ணீர் பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக தத்ரூபமாக செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
