கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோ ஷூட் நடத்த மெட்ரோ நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. மெட்ரோ ரயிலை இலாபகரமாக மாற்றும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி மெட்ரோ ரயிலில் போட்டோஷூட் நடத்த 5,000 ரூபாய் கட்டணமும், ஓடும் ரயிலில் போட்டோஷூட் நடத்த 8000 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வைப்பு தொகையாக 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
