எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கென்யா நீதிமன்றத்தில் எத்தியோப்பிய உள்நாட்டு போரின்போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக முகநூல் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தில் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு 16 ஆயிரம் […]
