எல்ஐசி நிறுவனம் மீண்டும் “மெடிக்ளைம்” பிரிவில் நுழைவதற்கு தயாராக உள்ளதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதன் தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “காப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது பற்றி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. சமீபத்தில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் முன்பே மெடிக்ளைம் பிரிவில் இயங்கி வந்துள்ளோம். அது தொடர்பான அனுபவம் எங்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். உடல் நலக் […]
