வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. […]
