விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வேர்கடலையை பயிரிட்டுள்ள அருண்பாண்டியன் அதில் ஊடுபயிராக பாரம்பரிய நாட்டு துவரையை பயிரிட்டுள்ளார். மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, உளுந்து […]
