விருதுநகர் மாவட்டத்தில் வெளியே செல்வதாக கூறி சென்றவரின் உடல் கண்மாயில் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சம்பந்தபுரம் பகுதியில் முகமது ரபீக்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே செல்வதாக கூறி சென்ற ரபீக் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைதொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் […]
