2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]
