திருப்பத்தூர் ஜோலார்பேட்டையிலுள்ள ராமரெட்டியூரை சேர்ந்த பிரபாகரன்(31) ரயில்வே பாயின்ட்ஸ் மேன் ஆவார். இவருக்கு பவிதாரணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் இருக்கின்றனர். சென்ற 20ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தபோது பிரபாகரன் திடீரென்று மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு […]
