மூலவர் காளஹஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுநாவலூர் ஊராட்சியை சேர்ந்த ரெட்டியார்பட்டி கிராமத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன் சோழர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் மரகதவல்லி தாயார் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நிறைய கல்வெட்டுகள் அமைந்திருக்கின்றது. தமிழ் வருடப் பிறப்பன்று கோயிலில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு வழக்கமாக நடைபெறும். இந்த நிலையில் […]
