கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா ? என்கின்ற RTI மூலம் வெளியான தகவல்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், பத்திரபதிவு துறை அமைச்சருமான மூர்த்தி அவர்களுடைய மூத்த மகன் திருமணம் மிகப் பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் உட்பட மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையிலே திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது […]
