மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த சிறிய கிராமம் சிக்கமாலூர். இந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர் தொடர்ந்து மதுக்கு அடிமையானதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவரை காணவில்லை. பின்னர் உறவினர்களும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர். தேடுதலுக்குப் பின் நாகராஜப்பா ஒரு புதர் பகுதியில் இறந்து கிடப்பதாக தகவல் […]
