பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்ரோடு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பட்டியல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டணத்தின் பட்டியலை […]
