முதல்வரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
