புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் முப்பெரும் தேவியாரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும். துர்க்கை வழிபாடு: நெருப்பின் அழகு, ஆவேச பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். […]
