தமிழகத்தில் குடும்பத்தினரால் கைவிடப்படும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக முதன்முறையாக இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னையின் கொளத்தூர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு என இலவசமாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு இடமளித்து இலவசமாகவுன் உணவளிக்கிறது. இந்த உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது. இதுகுறித்து மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா கூறுகையில், இத்தகைய தங்குமிடம் 2019ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் […]
