வந்தவாசி அருகே சொத்து தகராறு காரணமாக தாயை பழிவாங்குவதற்கு மகனே பாலில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெசராபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் மற்றும் மேரி இவர்களுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். மேரியின் பெயரில் வீட்டு மனை ஒன்று இருந்தது மேரி தனது இரண்டாவது மருமகளின் பெயரில் தனது சொத்தை எழுதி வைத்தார். இதை அறிந்த மூத்த மகன் மேரி இடம் பெரும் சண்டையிட்டு வாக்குவாதம் செய்தான் . […]
