மலேசியாவின் மூத்த தமிழ் அரசியல் தலைவர் டத்தோ சாமிவேலு(86) இன்று காலமானார்.மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த இவர் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழகத்துடன் எப்போதும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன் தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் பாலமாக செயல்பட்டவர் இவர்.இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
