Categories
உலக செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணுவாங்களா..! மூதாட்டியின் வினோத செயல்… காவல்துறையினர் அதிர்ச்சி..!!

பிரான்சில் மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தன் ஆடைகள் அனைத்தையும் களைத்து நிர்வாணமாக நின்ற சம்பவம் அங்கிருந்த காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 73 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் பிரான்ஸ் நாட்டின் உள்ள பாதுகலே என்னும் மாவட்டத்தின் அரசு நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்குள் கடந்த 16-ஆம் தேதி தன்னை கைது செய்யும்படி காவல்துறையினரிடம் கூறி நுழைந்துள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்க, அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எனக்கு எந்த பாதிப்பும் இல்லை”… கிராமத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் பாட்டி…!!

ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு,தனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

120 வயதில் தடுப்பூசி போட்டு கொண்ட மூதாட்டி… வீட்டிற்கு சென்று கௌரவித்த ராணுவத்தினர்…!!

ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே தூங்குனது குத்தமா… 70 வயது மூதாட்டியையும் விட்டுவைக்காத கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த ஒரு கும்பல் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் உறங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

தகனம் செய்வதற்கு சில நிமிடத்திற்கு முன்… உயிருடன் எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதையடுத்து 76 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்கு ஆயில் கெட்டிதான்… கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு காயம் கூட இல்லை… வைரலாகும் புகைப்படம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணிகுண்டா பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான சுப்பம்மா. இவர் வயல்வெளிக்கு அதிகாலை சென்றுள்ளார். அப்போது திடீரென விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து விழுந்துடுச்சு… அலறி சத்தம் போட்ட மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! தனியாக இருந்த மூதாட்டி… வாலிபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ.கீரனூரில் செல்லம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் செல்லமாளை மிரட்டி அந்த வாலிபர் அவர் காதில் இருந்த அரைப்பவுண் கம்மலை பறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது யாருனே தெரியல..! சடலமாக கிடந்த மூதாட்டி… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது. அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிநாடு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா..? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராமத்தில் சங்கம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய மகன் குடும்பத்தினருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த சங்கம்மாள் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி அளவுக்கதிகமாக தின்னுட்டாங்களே…! மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மூதாட்டி அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 62 வயதாகின்ற ராணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராணி காது வலிக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் தெரியாமல் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்து விழுந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவி இப்படி பண்ணிடானே..! மூதாட்டியை தள்ளிவிட்டு… மர்மநபர் செய்த செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சிவராமன் நகரில் பர்குணன் ( 70 ) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள் ( 65 ) என்ற மனைவி உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சின்னம்மாளிடம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளாகவே இது சரியில்ல…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் லஷ்மி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த லஷ்மி வீட்டில் யாருமில்லாத சூழ்நிலை பயன்படுத்திக்கொண்டு மண்ணெண்ணையை தன்னுடைய உடல் முழுவதும் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் கருகிய அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி வந்ததுன்னு தெரியல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொருவளூர் பகுதியில் 60 வயதுடைய ராமாயி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமாயி வீட்டில் இருந்த போது திடீரென  அவருடைய காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது. இதனால் ராமாயி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல..! மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மூதாட்டி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா (62) என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் முத்துமாரியம்மன் கோவிலினுள் கண்மலர் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பத்மாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மன […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிலேயே இவருக்கு தான் வயசு அதிகம்…. மொத்தம் 120 எள்ளு பேரக்குழந்தைகள்…. பல வரலாற்று நிகழ்வை கடந்த மூதாட்டி….!!

அமெரிக்காவில் 116 வயதாகின்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் வட கரோலினாவில் 116 வயதாகும் ஹெஸ்டர் போர்டு என்ற மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி திடீரென்று உயிரிழந்தார். மேலும் 116 வயதாகும் இந்த மூதாட்டி தனக்கு 14 வயது இருக்கும் போது ஜான் போர்ட் என்ற வாலிபரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் 12 குழந்தைகளுடனும், 68 பேரக்குழந்தைகளுடன், 125 கொள்ளுப்பேரக்குழந்தைகளுடனும், 120க்கும் அதிகமான எள்ளுப்பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்வை கழித்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சொந்தக்காரங்களுக்கு வந்துட்டு”, நமக்கும் வந்துருமோ…? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் கொரோனா தொற்றின் பயத்தால் மூதாட்டி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கோமதி என்பவர் வசித்து வந்தார். இவரது உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அவர் தனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலை பயன்படுத்திக்கொண்டு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த அழுகுரல்… பெற்ற தாயை வீசி சென்ற கொடூரன்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாயார் …மூதாட்டிக்கு நடந்த விபரீதம் …குடும்பத்தினற்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்…!!!

திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு  ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து  மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள  திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலயே..! அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் உடல் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தொழிற்சாலைக்கு பின்புறத்தில் உள்ள வாரியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பாடாலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் அந்த மூதாட்டி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்ணீனு நினச்சி இதயா குடிக்கனும்…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை தண்ணீரென்று நினைத்து குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திருமுல்லைவாயலில் 60 வயதுடைய மேகனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தினந்தோறும் மேகனா மிகவும் சிரமப்பட்டுதான் வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று நீரழிவு நோய்க்கான மாத்திரையை வாயினுள் போட்டுவிட்டு தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக பாட்டிலில் இருந்த கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்துள்ளார். இதனையடுத்து அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி செய்ய போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 75 வயதுடைய சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வடுகம்பட்டி போகும் சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்னாடியே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றனர். இதனையடுத்து இருவரும் பொதுமக்கள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி திடீரென்று சரஸ்வதி அணிந்திருந்த 41/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரஸ்வதி பெரியகுளம் காவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்க உரிமையை விட்டு குடுக்க மாட்டோம்”… தள்ளாடும் வயதிலும்… தவறாமல் வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 102 வயதிலும் மூதாட்டிகள் தவறாமல் வாக்குப்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்துள்ளனர். வாக்களிப்பது என்பது நம் அனைவருடைய ஜனநாயக கடமை ஆகும். அந்த கடமையை தவறாமல் முதியவர்களும் வந்து வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைவரின் கடமையையும் உணர்த்தும் விதமாக 102 வயதில் கையில் கம்பு ஊன்றி ஒரு மூதாட்டியும், மற்றொரு மூதாட்டி தள்ளுவண்டியில் வந்தும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாயால வட சுட்டு இப்படி செஞ்சிட்டு போயிட்டாரு…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் மூதாட்டியிடம் மர்ம நபர் சாதூர்யமாக பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் புதூரில் 70 வயதான கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியே செல்வதற்காக முத்துராமலிங்கபுரம் நகரில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் சாதுர்யமாகப் பேசியுள்ளார். அதாவது மர்மநபர் தன்னை காவல்துறை அதிகாரி என்று மூதாட்டியிடம் அறிமுக படுத்திக் கொண்டார். இதனையடுத்து அவர் இப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க சென்ற முதியவர்… தடுமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ராஜகோபாலபுரம் வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டிக்கு வாக்களிக்க துணையாக சென்ற அலுவலருக்கு அதிமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக அண்ணாநகரை சேர்ந்த லட்சுமி என்னும் மூதாட்டி வந்திருந்தார். அவர் அங்கு தடுமாறியபடி சென்றார். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கிருந்த அலுவலர்கள் துணையாக வாக்களிக்க சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிமுக முகவர்கள் சிலர் அலுவலர் துணையாக செல்லக்கூடாது. ரத்த […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பரம் மூலம் மாப்பிள்ளை தேடும் 73 வயது மூதாட்டி”…அதுக்கும் கிராக்கிதான்…!!

மைசூர் மாவட்டத்தில் மாப்பிள்ளை வேண்டும் என்று 73 வயதான மூதாட்டி ஒருவர் விளம்பரம் கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு வயது 73 அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன்னை விட மூன்று வயது அதிகமாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் என்னுடன் நேரத்தை செலவிட ஒரு துணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென சாமியாடிய மூதாட்டி… அருள்வாக்கு கூறியதால்… சால்வை போற்றிய அதிமுக அமைச்சர்…!!!

மதுரையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மூதாட்டி ஒருவர் சாமி வந்து அருள்வாக்கு கூறினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பசி மற்றும் நோய் தொற்றால் உயிரிழந்த மூதாட்டி… பெரும் சோகம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 63 வயதுடைய மூதாட்டி பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாவட்டம், மந்தர் பகுதியில் 63 வயதுடைய துகியா என்ற மூதாட்டி பசி  மற்றும் நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திய தாகவும், அவர் தனது சகோதரி மற்றும் 22 வயதுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . பின்னர் அந்த மூதாட்டி அந்த பகுதியில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மூதாட்டிகளை குறிவைக்கும நகை திருட்டு கும்பல்…. பாட்டிகளே பத்திரமா இருங்க…!!!

சென்னையில் மீன் மார்க்கெட்டில் மகனின் நண்பன் என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த தாண்டவராயன்  பகுதியில் வீரசின்னம்மாள் (65) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 15ஆம் தேதி மீன் மார்க்கெட்டிற்கு சென்றபோது திடீரென ஒரு இளைஞன் தன்னை வீரசின்னம்மாளிடம் நான் உங்கள் மகன் போஸின் நெருங்கிய நண்பன் என்று கூறி பேசியுள்ளார். பாட்டியும் அவரிடம் நன்றாக பேசி கொண்டிருந்த போது அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டு தானே என்று விட்டிருக்கலாம்…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விபத்து விருதுநகர்

கட்டுப்பாடில்லாமல் ஓடிய வாகனம்…! பின்னர் நடந்த அதிர்ச்சி… விருதுநகரில் சோகம் ..!!

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மூதாட்டியின் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சீனியம்மாள், இவரது கணவர் வீரப்பெருமாள் வயது 80. இவர்கள் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். சீனியம்மாள் அவரது வீட்டின் வேலைகளை முடித்துவிட்டு தனது வீட்டின் முன்பு அமர்ந்து அவரது கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த வாகனம் சீனியம்மாள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்டுமான நிதி திரட்டு… 28 ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை கொடுத்த 80 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்…!

ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 80 வயது மூதாட்டி 51,000 ரூபாய் நன்கொடை அழைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக குறைந்த தொகையாக பத்து ரூபாயைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூல் செய்து வரும் போது கான்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வசித்த 80 வயதான கிருஷ்ணா தீட்சித் என்ற மூதாட்டி 51,000 ரூபாய் […]

Categories
Uncategorized

என்னாது… கொரோனா வந்தா விரல் அழுகுதா…! இது என்னப்பா புதுசா இருக்கு… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!

மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் மூன்று விரல்கள் அழுகிய  சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை மட்டுமே பாதிக்கப்படும் என்று சொல்லி வந்த நிலையில், தற்போது உடல் உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், இத்தாலியின் 86 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அவரது உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன்பிறகு ஒருநாள் திடீரென அவரின் உடலின் பாகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

சாலையோரம் கிடந்த 72 வயது மூதாட்டி…” சிசிடிவி காட்சிகளில் கிடைத்த உண்மை”… அதிர வைத்த சம்பவம்..!!

சென்னை திருவெற்றியூரில் 72வயது ஒரு மூதாட்டி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த காயத்துடன் ஒரு மூதாட்டி அடிபட்டு கிடந்தார். இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையில் அடிபட்ட நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டும்… கொஞ்சம் வாங்க…. மூதாட்டியிடம் நூதனமுறையில் திருட்டு..!!

சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

“இளமை இதோ” 62 வயதில் கலக்கும் பாட்டி…. சொந்தக்காலில் நின்று அசத்தல்….!!

உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு  திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுவன்… “கஞ்சாவிற்கு அடிமையாகி”… 68 வயது மூதாட்டியை கொன்று சடலத்துடன் உல்லாசம்..!!

திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரை பவுனுக்காக கொலையா…? மூதாட்டியை கொன்ற இளைஞர்…. போலீஸ் விசாரணை….!!

மது போதையில் மூதாட்டியை கொன்று விட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்-மதிமுனியம்மாள். பெருமாள் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி மதிமுனியம்மாள்(90) மட்டும்  தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் செய்து வந்தார் . இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  ராஜா மது அருந்திவிட்டு மூதாட்டியின்  வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த மூதாட்டியிடம்  ராஜா நகையை பறிக்க […]

Categories
உலக செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி… திடீரென வீட்டில் நுழைந்த நபர்…. பின் நடந்த சம்பவம்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் […]

Categories
தேசிய செய்திகள்

பார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…??

நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் மகன்போல பழகி வாடகை வீட்டை சொந்த வீடாக்கிய மோசடி இளைஞர்..!

பூந்தமல்லியில் வயதான மூதாட்டியை ஏமாற்றி  50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு குடியிருந்த நபர் சொந்தமாக்கிய சம்பவம்  அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது சரோஜா என்ற மூதாட்டி. இவருக்கு  2 மகள்கள் . இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு வரும் பென்சன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார்.  மூதாட்டி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி – உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்….!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாம் இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேகே நகர் இஎஸ்ஐ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக ஆட்டோ மூலம் நெய்வேலி புறப்பட்டு சென்றார். இதனிடையே  மூதாட்டி […]

Categories
உலக செய்திகள்

99 வயதான விமான பயிற்சியாளர்.. கின்னஸ் சாதனை படைத்த பாட்டி…!!

99 வயதான மூதாட்டி விமான பயிற்சியாளராகவும் மாணவர்களுக்கு விமானம் சம்பந்தமான பாடங்கள் நடத்தியும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடங்களை பல வருடங்களாக கற்பித்து வந்தார். இவர் தற்போது விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை நடத்தி முடித்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல் அவர் அந்த விமானத்தைை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை… 29 வயது இளைஞர் கைது…!!

குடிபோதையில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராகுல்(29). இவருக்கும் இவரது தந்தை கோவிந்தராஜிற்கும் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராகுலை அவரது தந்தை வீட்டினுள் வைத்து பூட்டி உள்ளார். குடிபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேவந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் 65 வயதான மூதாட்டி […]

Categories
உலக செய்திகள்

 99 வயதில்….. யாரும் முறியடிக்க முடியாத 2 கின்னஸ் சாதனை….. மூதாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

அமெரிக்காவில் 99 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது வயது மதிக்கத்தக்க மூதாட்டியான ரூபினா என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்சிபல் விமான நிலையத்தில் நெக்ஸ்ட் ஜன் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பாகவும், அதை இயக்குவது தொடர்பாகவும் பாடத்தை விளக்கி மாணவர்களுக்கு கூறினார். இதை தொடர்ந்து அவர் விமானத்தை இயக்கி வானில் பறந்தும் அங்குள்ளவர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே 99 வயதில் விமானத்தை இயக்கியவர், […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

தப்பிய 60 வயது கொரோனா மூதாட்டி …! 7கிலோமீட்டர் வீட்டிற்கு நடந்தே சென்றார் ….!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

6 நாட்களில் மீண்ட 100வயது மூதாட்டி….! கொரோனா ஜலதோஷம் என்று கடந்தார் …!!

நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டு வந்துளளார். கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி  கொரோனா நோயில் இருந்து  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவில் இருந்து […]

Categories

Tech |