சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]
