கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் […]
