தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி பகுதியில் சூடம்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான முனியப்பா இறந்துவிட்டதால் சூடம்மா தனது மகனான திம்மராஜ், மருமகள் சரஸ்வதி ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூடம்மா இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மகன் திம்மராஜ் எதிர்பாராதவிதமாக எழுந்து வந்து பார்த்த போது சூடம்மா பேச்சு […]
