கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]
