மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுசிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சுசிலா தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு […]
