மூதாட்டியின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி வாய்க்கால்கரை பகுதியில் மாரியம்மாள் என்பவர் தனியாக வசித்து வருகின்றார். இவரின் மகள் அடுத்த தெருவில் தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி வருவதால் அந்தப் பணிகளை மாரியம்மாள் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் மாரியம்மாள் தனது உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்ப வீட்டிற்கு சென்று தான் அணிந்திருந்த […]
