மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி பகுதியில் 65 வயதுடைய ராமலட்சுமி என்ற மூதாட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சென்னை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அப்பகுதியில் உள்ள ரயில்வே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் ராமலட்சுமி நிறுத்தி […]
