வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலி செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(70) என்பவரின் மனைவி நாகலட்சுமி (68).இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (32) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . […]
