சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாமரத்துப்பட்டியில் பெரியண்ண கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாயி(68) என்ற மகளும், கந்தசாமி(65) என்ற மகனும் உள்ளனர். தற்போது பாப்பாயி குடும்பத்தினருடன் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பாப்பாயி வசிக்கும் வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். […]
