Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் முடங்கும் சில்லறை வியாபாரம்… 850 பழக்கடைகளை மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு மார்க்கெட் மூடல் – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு ….!!

22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்  செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் 22ஆம் தேதி கோயம்பேட்டில் இருக்கக்கூடிய எந்த கடையும் செயல்படாது என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களை அறிவித்திருந்தார். மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவேண்டும். வெளியில் யாரும் வரக்கூடாது. 22ஆம் தேதி அனைவரும் வீடுகளிலே இருக்க வேண்டுமென பல்வேறு உத்தவரை சொல்லி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

கேரளா: பத்மநாபபுரம் அரண்மனை மூடல்.!!

வேகமாக பரவிவரும் கொரானா அச்சத்தால்  தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை பழமை வாய்ந்த அரண்மனை இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர். பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய புகழ் பெற்ற இந்த அரண்மனையை கொரானா அச்சத்தால்  மூட கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கேரள அரசு இந்த  நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |