சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திமுக கொடி கம்பம் நடும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 வயது மாணவி பிரியதர்ஷினி மீது திடீரென்று கொடிக்கம்பம் விழுந்ததில், அவரின் மூக்கு தண்டு உடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
