Categories
அரசியல்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைத்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன்: ஸ்டாலின் ட்வீட்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோன்ற நேரத்தில் மன்மோகன் சிங்கின் சேவை நம் நாட்டுக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் மின்சாரச் சட்டத்திருத்தம் ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து – மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தம் விவசாயிகள், ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் மின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த நேரத்துல….. இப்படி பண்ணாதீங்க….. உடனே நிறுத்துங்க..!

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை […]

Categories
அரசியல்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும்: மே தின வாழ்த்து கூறி ஸ்டாலின் உரை..!

மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, […]

Categories
அரசியல்

ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை […]

Categories
மாநில செய்திகள்

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு – ஸ்டாலின் விமர்சனம்!

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான உதவிகளை திமுகவினர் செய்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றுமை எண்ணமே இல்லாத முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது கெட்ட வாய்ப்பு என தெரிவித்துள்ளார். பக்குவம் பெறாத அரசியலுக்கு தக்க தருணத்தில் நிச்சயம் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் – மு.க. ஸ்டாலின்!

பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட மனசு இல்ல…. இகழ்ந்து பேசுறீங்க…. ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர்….!!

தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினின் குற்றசாட்டு, கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்துகிறது – முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் கொரோனாவை தடுக்க தன்னலமற்று பணிபுரிபவர்களை கொச்சைபடுத்தும் விதமாக குற்றம் சாட்டுகிறார் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அரசு மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் இணையதளத்தில் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி வெளியிடப்படுகின்றது. இருந்தும் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது அவரது சந்தர்ப்பவாத அரசியலை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டாலினின் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பட்டினிச்சாவுகள் ஏற்படாமல் தடுக்க அரசு திட்டமிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா அறிவாலய அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் – மு.க.ஸ்டாலின்!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கொரோனா வைரசுக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா யுத்தம்.. நடக்கும் உயிரியல் போர்.. “வரும் முன் காப்போம்” – மு.க. ஸ்டாலின்..!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “வரும் முன் காப்போம்” என்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய மாநில அரசுகள் இந்த நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு குறித்த தமிழக அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது – மு.க. ஸ்டாலின்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி மு.க. ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு – ஏப்., 8ம் தேதி மு.க. ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

அவதூறு வழக்கில் ஏப்., 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு […]

Categories

Tech |