கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ளனர். […]
