22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 22 அடி. இதில் 21. 32 அடி […]
