முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு. அதனால், உடல் எடையைக் குறைக்க விருப்புகிறவர்களுக்கு ஏற்றப் பழமாகவும் முலாம் பழம் இருக்கிறது. குறிப்பாகத் தோல் அழற்சியைத் தணிக்க பழத்தின் சாறுகள் பயனுள்ளவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதனால் சருமம் புத்துயிர் பெறும். முலாம்பழத்தில் இனோசிட்டால் இருப்பதால் தலைமுடியில் முலாம்பழ கூழ் தடவி அதன் பிறகு கழுவுவதன் மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம். முலாம் பழ சாற்றை குடிப்பதன் மூலம் வயதான சுருங்கிய சருமத்தை சரிசெய்யலாம். […]
