பிரபல நடிகர் குறித்த வதந்திகளுக்கு அவருடைய மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர். இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இதற்காகவே நடிகர் நாசருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் நாசர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவியது. இந்த செய்தி காட்டுத்தீ […]
