திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சி உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி […]
