கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]
