முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்படும் சில நோய்கள் மீண்டும் உலகில் ஆங்காங்கு தலைகாட்டத் துவங்கியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிது புதிதாக தோன்றும் நோய்கள் ஒருபக்கம் மனித இனத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பூசிகள் மூலம் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டதாக நம்பப்படும் சில நோய்கள் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சமீபத்தில் பிரித்தானியா நாட்டில் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் டிப்தீரியா என்னும் தொண்டை அடைப்பான் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் […]
