நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு இன்று ராகுல்காந்தி ஆஜரானார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர். அப்போது அனுமதியை மீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களை , போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது போலிஸாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் போது போலிஸார் தாக்கியதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு […]
