ஆணவக்கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் […]
