தைப்பூச திருநாளின் சிறப்புகள்: முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையாக கருதப்படுகிறது. தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் விசேஷமானது. தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிர்ப்பு சக்தியான தண்ணீர் சிவபெருமானால் தோன்றியது. தண்ணீரின் தொடர்ச்சியாக நிலம்,ஆகாயம், நெருப்பு,காற்று ஆகியவையும் அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். […]
