கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் முருகன் சிலையை வைக்க அனுமதி கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பொதுமக்கள் முருகன் சிலையை வைக்க முயன்றுள்ளார்கள். இதை அறிந்த தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி அந்த சிலையை வாங்கி கோவிந்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டார். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் […]
