புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் […]
