சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிராமங்களில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம், சிறுவாச்சூர், ஆலம்பாடி, குரும்பலூர், திருநகர் ஆகிய பகுதிகளில் சித்திரை மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முயல் வேட்டை திருவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள […]
